வில்லன் வேடத்தில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறார் விஜய்சேதுபதி

#Cinema #Actor #TamilCinema #lanka4Media #lanka4_news #lanka4.com
வில்லன் வேடத்தில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறார் விஜய்சேதுபதி

இந்திப் பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார், சண்முகராஜா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’.

 இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 12-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மும்பையில் நடந்தது. அப்போது விஜய் சேதுபதியிடம் தொடர்ந்து வில்லனாக நடிப்பது ஏன் என்று கேட்கப்பட்டது.

images/content-image/1704724206.jpg

 அதற்கு அவர் கூறும்போது, “வில்லனாக நடிப்பது பிடித்திருக்கிறது. நிஜ வாழ்க்கையில் நான் யாரையும் சித்திரவதை செய்யவோ, கொல்லவோ முடியாது. திரைப்படங்களில் அதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. 

நிஜத்தில் எனக்கு கோபம், ஈகோ இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் பணிவாகத்தான் இருக்க முடியும். திரைப்படங்களில் உணர்ச்சிகளோடு விளையாட முடியும். அதற்காக என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். உணர்ச்சி வெளிப்பாடுகள், உணவு மற்றும் சுவையைப் போன்றது. நான் அனைத்து சுவைகளையும் கொண்டிருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!