பிரான்ஸின் இல் து மாகாணம் கொட்டிய பனிப்பொழிவால் வெள்ளைக்காடாக தோற்றமளிக்கிறது
#France
#Lanka4
#லங்கா4
#Snow
#பிரான்ஸ்
#Forest
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
நேற்று இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த பனிப்பொழிவினால் இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் வெள்ளை காடாக காட்சியளிக்கிறது. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பரிசில் பேருந்து சேவைகள் மற்றும் ட்ராம் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. நேற்று இரவு 10 மணி அளவில் -1 ° C குளிர் பரிசில் பதிவானது. வீதிகளில் தரித்து நின்ற வாகனங்கள் மீது பனி கொட்டி மூடியிருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதேவேளை, நள்ளிரவு 1 மணி அளவில் 150 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. A13 மற்றும் N118 சாலைகள் பாதிக்கப்பட்டிருந்தன.