ஆன்லைன் சூதாட்டத்தை ஒன்றிய அரசு தடைசெய்ய துரை வைக்கோ வலியுறுத்து
#India
#government
#தடை
#Ban
#லங்கா4
#இந்தியா
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
1 year ago

ஆன்லைன் சூதாட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நாடு முழுவதும் முழுமையாக தடைசெய்து சட்டம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



