இணையவழி ஊடாக சிறுகதைகள் வாசிப்பு சாதனையை நிலைநாட்டியுள்ள கனடா தமிழ் எழுத்தாளர்

#Canada #Tamil People #short story #Canada Tamil News #writer #online #lanka4Media #lanka4.com #Lanka4 canada tamil news #Record
Prasu
1 year ago
இணையவழி ஊடாக சிறுகதைகள் வாசிப்பு சாதனையை நிலைநாட்டியுள்ள கனடா தமிழ் எழுத்தாளர்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவரும் பன்முகப் படைப்பாளியுமாகிய அகணி சுரேஷ் அவர்கள் அண்மையில் இணையவழி ஊடாக நிலைநாட்டியுள்ள சிறுகதைகள் வாசிப்பு சாதனையை உலகெங்கும் உ ள்ள கலை இலக்கிய நண்பர் பாராட்டியவண்ணம் உள்ளார்கள்.

திரு. அகணி சுரேஷ் அவர்கள் 06-01-24 காலை 09:55 மணிக்கு (இந்தியா நேரப்படி) தொடங்கி 08-01-24 அதிகாலை 02:55 மணிக்கு நிறைவு செய்துள்ளார். இந்த சிறுகதை வாசிப்புச் சாதனை முயற்சியில் அ வர் தொடர்ந்து 133 எழுத்தாளர்களுடைய133 சிறுகதைகளை வாசித்து சாதனை நிகழ்த்தினார்.

images/content-image/1704836491.jpg

41 மணி நேரம் நடைபெற்ற இந்த சாதனை உலக சாதனையாக ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் செவெ வேல்டு ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை வெற்றிகரமான நிலைநாட்டியுள்ளதை Amb. DR. WRH. HA. HOF சி. கலைவாணி, (பொது செயலாளர் செவெ குரூப்) அவர்கள் உறுதி செய்து சாதனைச் சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

images/content-image/1704836505.jpg

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவரும் பன்முகப் படைப்பாளியுமாகிய அகணி சுரேஷ் அ வர்கள் நிலைநாட்டியுள்ள 'சிறுகதைகள் வாசிப்புச் சாதனை முயற்சிக்குத் துணையாக கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தைச் சேர்ந்த பல அங்கத்தவர்கள் உறுதுணையாக இருந்தும் நித்திரை விழித்திருந்து அவருக்கு ஒத்தாசை வழங்கினார்கள் என்பதும் பாரரட்டுக்குரியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!