கடந்த ஆண்டு பரிஸ் மக்கள் 120 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் வீணடித்துள்ளனர்

#France #people #Time #Lanka4 #மக்கள் #லங்கா4 #பிரான்ஸ் #Traffic #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
8 months ago
கடந்த ஆண்டு பரிஸ் மக்கள் 120 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் வீணடித்துள்ளனர்

பரிஸ் மக்கள் சென்ற ஆண்டு போக்குவரத்து நெரிசலில் சிக்கி 120 மணிநேரங்களைத் தொலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வினை, சென்ற ஆண்டும் Index de TomTom நிறுவன்ம் மேற்கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு பரிசில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஆண்டாக அமைந்தது. சராசரியாக மணிக்கு 23 கி.மி குறைந்த வேகம் கொண்ட நகரமாக பரிஸ் சென்ற ஆண்டு திகழ்ந்துள்ளது.

images/content-image/1704894670.jpg

 பரிசைச் சேர்ந்த மக்கள் மொத்தமாக 120 மணிநேரங்களை போக்குவரத்து நெரிசலில் வீணடித்துள்ளனர். இது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 மணிநேரங்கள் அதிகமாகும். அதேவேளை, போக்குவரத்து நெரிசலில் சிக்கி 288 யூரோக்கள் மதிப்புள்ள எரிபொருளை வீணடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பரிசுக்கு அடுத்ததாக Bordeaux மற்றும் Lyon நகரங்கள் உள்ளன.