கிரிக்கெட் போட்டியின் போது மாரடைப்பால் உயிரிழந்த வீரர்(காணொளி)

இந்திய உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் இடம்பெற்ற கிரிகெட் போட்டியில் வீரர் ஒருவர் உயிரிழந்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நொய்டா பகுதியைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரான குறித்த கிரிக்கெட் வீரர் விளையாடியபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
நொய்டா பொறியியலாளர் விகாஸ் நேகி என்பவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவராவார். இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் நொய்டா பகுதியில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த அவர், ஓட்டங்களை எடுக்க முற்பட்டபோது, சக வீரரிடம் கைகுலுக்கி விட்டு அப்படியே மைதானத்தின் நடுவே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அவர் விழுந்ததை கண்ட சக வீரர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாயில் அனுமதித்துள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.




Here is the video of the match from the ground's youtube pic.twitter.com/9kOT4O8Hj9
— पंडितजी (@great_panditji) January 9, 2024