பிரான்ஸில் மீளப்பெறப்படும் விற்பனைக்கனுப்பப்பட்ட கோழியிறைச்சித் துண்டுகள்

#France #Chicken #Lanka4 #லங்கா4 #கோழியிறைச்சி #பிரான்ஸ் #Return #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
8 months ago
பிரான்ஸில் மீளப்பெறப்படும் விற்பனைக்கனுப்பப்பட்ட கோழியிறைச்சித் துண்டுகள்

விற்பனைக்கு அனுப்பப்பட்ட பொதி செய்யப்பட்ட கோழி இறைச்சிகள், மீளப்பெறப்படுகிறது. குறித்த கோழி இறைச்சியில் உடலுக்கு தீங்கான பக்டீரியா பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சந்தையில் மிகவும் பிரபலமான Loué நிறுவனத்தின் இறைச்சிகளில் ‘தொடை’ துண்டுகள் பொதிசெய்யப்பட்ட அனைத்து இறைச்சிகளும் நேற்று ஜனவரி 10 ஆம் திகதி முதல் மீளப்பெறப்படுகிறது.

images/content-image/1704980460.jpg

 அவற்றில் listeria monocytogenes எனும் ஆபத்தான பக்டீரியா இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அது விஷமுற்ற உணவாக கருதப்படுகிறது. அவற்றை உட்கொள்ளுவதால் ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு உள்ளாக நேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.