யாழ் இளைஞன் பிரித்தானியாவில் படுகொலை!

#SriLanka #Jaffna #UnitedKingdom #Murder #world_news #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
11 months ago
யாழ் இளைஞன் பிரித்தானியாவில் படுகொலை!

லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கத்திக்குத்து தாக்குதல் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

images/content-image/1705121136.jpg

மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞன் தொடருந்தில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!