பொங்கலை முன்னிட்டு மலர்ச்சந்தைகளில் மலர் விற்பனை விலைகள் உச்சத்தினை தொட்டுள்ளது
#India
#prices
#Pongal
#Flower
#லங்கா4
#இந்தியா
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
1 year ago

பொங்கல் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்காக தற்போது பொதுமக்கள் முன்வந்துள்ளனர்.
அதில் முக்கியமாக கருதப்படும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தோவாளை மலர்சந்தையில் கிலோ ரூ.1,600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ தற்போது ரூ.2,100க்கு விற்பனையாகிறது.
பிச்சிப்பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,100ஆக அதிகரித்துள்ளது.



