பொலன்னறுவையில் ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளான கெப் வாகனம் : ஒருவர் படுகாயம்!

#SriLanka #Accident #Polonnaruwa #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4_news
Thamilini
2 years ago
பொலன்னறுவையில் ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளான கெப் வாகனம் : ஒருவர் படுகாயம்!

பொலன்னறுவை வெலிகந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கெப் வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

தம்பதிகள் பயணித்த வாகனம் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த கணவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடப்பதற்கு சற்று முன் வாகனத்தில் இருந்து மனைவி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெனுடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4