இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Rain #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (14.01) ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4