நீதி நடவடிக்கையின் கீழ் இன்னும் 50000 பேர் கைது செய்யப்படுவார்கள் - தேஷபந்து தென்னகோன்!

#SriLanka #Arrest #Police #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
நீதி நடவடிக்கையின் கீழ் இன்னும் 50000 பேர் கைது செய்யப்படுவார்கள் - தேஷபந்து தென்னகோன்!

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் எதிர்வரும் காலத்தில் சுமார் 50  ஆயிரம் பேர் கைது செய்யப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர்  தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான மக்கள் திடீரென செல்வந்தர்களாக மாறிய நிலையிலேயே சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நீதி நடவடிக்கை முடிவுக்கு வருமா என பலரும் கேட்கின்றனர்.இதற்கு ஒரு முடிவு நாள் உள்ளது.  அந்த நாளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து அச்சம் இல்லாமல் வாழ்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4