சுவிட்சர்லாந்தில் குளிரில் வாடும் மக்கள்!
#SriLanka
#Switzerland
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
எரிவாயு விலை உள்பட மின்சார கட்டணங்களும் அதிகரித்து வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பனிக் காலநிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக மக்கள் கடும் குளிரை சந்தித்து வருகின்றனர்.
அந்தவகையில் சுவிட்சர்லாந்தில் உள்ள பல நகர்களில் பனிப்பொழிவு பெய்து வருகின்ற நிலையில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டண அதிகரிப்பாலும் காஸ் தட்டுப்பாட்டலும், விலை அதிகரிப்பாலும் மக்கள் வீட்டில் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், குளிரில் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.



