யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு!

#SriLanka #Jaffna #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், வான்கலவாடி கடற்கரைக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 06 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள, புதைக்கப்பட்ட கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

வடக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS Elar க்கு சொந்தமான நயினாதீவு கடற்படை பிரிவினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நடவடிக்கையின் போது, கடற்கரைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த 03 கிலோ கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். மீட்கப்பட்ட கேரள கஞ்சா 06 கிலோ 40 கிராம் எடையுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.  

இந்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி  02 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4