வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் டின் இலக்கத்தை பெற வேண்டுமா? வெளியான தகவல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் டின் இலக்கத்தை பெற வேண்டுமா? வெளியான தகவல்!

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார். 

அத்துடன் டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையிலிருந்து வருமானம் ஈட்டினால்  கண்டிப்பாக TIN எண்ணை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனப் பதிவு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மோட்டார் வாகனத் திணைக்களத்துடன் கணினிகளை இணையப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கை சுங்கத்துடன் கணனி வலையமைப்பில் செயற்படுவதால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான அனைத்து தகவல்களையும் திணைக்களம் பெற்றுக் கொள்கிறது. மேலும் அனைத்து நிறுவனங்களுடனும் வலையமைப்பதன் மூலம் தலைமறைவாக இருக்கும் வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4