உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் தமிழனின் கைவண்ணங்கள்! வல்வெட்டித்துறையில் சாதனை

#SriLanka #Jaffna #Festival #Tamil People #Pongal #Lanka4
Mayoorikka
2 years ago
உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் தமிழனின் கைவண்ணங்கள்! வல்வெட்டித்துறையில் சாதனை

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்றைய தினம் பொங்கல் தினத்தில் நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டியில் 90ற்கு மேற்பட்ட கண்கவர் சாகச விசித்திர பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டு இருந்தன.

 போட்டியில் முதலாம் இடத்தினை, "ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்" என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை அந்த பட்டத்தினை வடிவமைத்த வினோதன் பெற்றுக்கொண்டார். 

images/content-image/2023/01/1705379146.jpg

 இரண்டாம் இடத்தினை " விண்வெளியில் நிலை நிறுத்திய செயற்கை கோள்" என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை , அந்த பட்டத்தினை வடிவமைத்த பிரசாந்த் பெற்றுக்கொண்டார். 

images/content-image/2023/01/1705379160.jpg

 மூன்றாம் இடத்தினை " ஏலியன்ஸ் மர்ம தாக்குதல் விமானம்" என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை அந்த பட்டத்தினை வடிவமைத்த கம்ஸன் பெற்றுக்கொண்டார்.

images/content-image/2023/01/1705379175.jpg

  குறித்த பட்ட போட்டி நிகழ்வினை காண யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/01/1705379191.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4