நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் வேலையில் உயர்ந்த நிலையை அடைய முடியவில்லையா ?

சிலரால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடிவதில்லை. இதற்கு காரணம் உங்களுக்கான வேலையை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்பதே காரணமாகும். நம்மில் பெரும்பாலோர் தங்களுக்கு விருப்பமான தொழில் அல்லது வேலைகளை செய்து ஒரு வழக்கமான வாழ்க்கை முறையை வாழ்கிறோம்.
இருப்பினும், நீங்கள் நினைத்தால் அந்த வழியில் செல்வதை விட, நீங்கள் விரும்பிய வாழ்க்கையை உருவாக்க முடியும். அனைவரும் தங்களால் முயன்ற பணிகளை செய்து வருகிறோம். இதைச் செய்ய, நாம் பகல் மற்றும் இரவு முழுவதும் விடாமுயற்சியுடன் உழைக்கிறோம், ஆனாலும் சிலரால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடிவதில்லை.
இதற்கு காரணம் உங்களுக்கான வேலையை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்பதே காரணமாகும். அதாவது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனிப்பட்ட திறமைகள் இருக்கும். அவர்களுக்கென உள்ள துறைகளை தேர்ந்தெடுத்து பணியாற்றினால் வெற்றி பெறலாம்.
எனவே, உங்கள் ராசி அடையாளத்தின் படி, உங்கள் சிறந்த வாழ்க்கைப் பாதையை இங்கு கண்டுபிடிப்போம்.,
மேஷம்
மேஷம் ஒரு முதலாளித்துவத்தின் அடையாளம். மேஷ ராசிக்காரர்கள் தைரியமானவர்கள், தன்னம்பிக்கை உடையவர்கள். இவர்கள் மற்றவர்களை வழிநடத்துவதில் திறமை வாய்ந்தவர்கள். இதன் விளைவாக பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள் மேலாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளாக, பத்திரிகை துறைகளில் சிறந்து விளங்கக்கூடும்.
எடுத்துக்காட்டு: முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொழிலதிபர் மற்றும் எம்.டி.
ரிஷபம் :
ரிஷபம் நிலம் ராசியாகும். இவர்கள் அமைதியானவர்களாகவும், பொறுமைசாலியாகவும் இருப்பார்கள். விடாமுயற்சி, நம்பிக்கையுடன் பணியாற்றுவார்கள். மேலும் எப்போதும் தங்கள் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருபார்கள். பெரும்பாலான ரிஷப ராசிக்காரர்கள் அழகு மற்றும் பேஷன், வங்கி மற்றும் நிதி, உயிரியல் மற்றும் தாவரவியல் துறையில் சிறப்பாக இருப்பார்கள்.
எடுத்துக்காட்டு: டொனடெல்லா வெர்சேஸ் - பேஷன் டிசைனர்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்கள் அனைவருடனும் எளிதாக பழக கூடியவர். என்ன நடந்தாலும் அதனை எளிதாக கடந்து செல்லும் மனப்பக்குவம்கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பயணம் செய்வதை விரும்புவார்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் சுற்றுலா வழிகாட்டி, ஆசிரியர், எழுத்தாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் துறையில் பணியாற்றினால் சிறப்பாக வாழலாம்.
எடுத்துக்காட்டு: சல்மான் ருஷ்டி - எழுத்தாளர்.
கடகம் :
இந்த ராசிக்காரர்கள் நீர் ராசியின் அமைப்பில் உள்ளனர். நீர் பெரும்பாலும் ஆற்றல் வாய்ந்தவை. கடக ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்ச்சி தேவைகளை புரிந்து நடப்பதில் கெட்டிகார்கள். இந்த ராசிக்காரர்களின் பெரும்பாலானோர் ரியல் எஸ்டேட், சமையல்காரர், உள்துறை வடிவமைப்பாளர் அல்லது ஒரு சமூக சேவையாளராக இருப்பார்கள்.
எடுத்துக்காட்டு: வொல்ப்காங் பக் - ஆஸ்திரிய செஃப்
சிம்மம் :
சிம்மம் நெருப்பு ராசியாகும். இவர்கள் சூடாகவும், உணர்ச்சியுடனும், கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். தன்னம்பிக்கை நிறைந்த சிம்ம ராசிக்காரர்கள் பார்க்க கோபக்காரராக இருந்தாலும் பழக இனிமையானவர்கள். இவர்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் நடிகை, நடிகர், நிகழ்ச்சி அமைப்பாளர், பயிற்றுவிப்பாளர் மற்றும் வடிவமைப்பாளர் போன்ற துறைகள் சிறந்து விளங்குவார்கள்.
எடுத்துக்காட்டு: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் - நடிகர்.
கன்னி
நிலம் ராசியாகும். அதாவது மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு தொழிலுக்கும் தங்களை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றி வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் கணக்காளர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள்.
எடுத்துக்காட்டுகள்: மைக்கேல் ஃபாரடே - விஞ்ஞானி.
துலாம் :
துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவுவதிலும், உறவுகளை வளர்த்துக் கொள்ளவும், நீதியை மீட்டெடுக்கும் பதவிகளில் சிறந்து விளங்குவார்கள். இந்த ராசிக்கார்கள் மனிதவள மேலாளர், துப்பறியும் வழக்கறிஞர், அல்லது ஆலோசகர் பணிகளில் மிகச் சிறந்து பணியாற்றுவார்கள்.
எடுத்துக்காட்டுகள்: மகாத்மா காந்தி - வழக்கறிஞர் மற்றும் தேசத்தின் தந்தை.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட வேலையை சவாலாக நினைத்து பணியாற்றுவார்கள். இதனால் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் வெற்றியாளர்களாக இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆராய்ச்சியாளர், தொழிலதிபர், பொறியாளர், நிதி ஆலோசகர் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
எடுத்துக்காட்டுகள்: டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.
தனுசு :
தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் கூட்டமாக இருப்பதையே விரும்புவார்கள். பெரும்பாலும் தனியே வெளியே போவதையும், தனிமையையும் வெறுக்கிறார்கள். இதனால் குழுவாக பணியாற்றுவதில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்களுடன் பணியாற்றும் போது மிகவும் பொறுமையாக இருப்பார்கள். இவர்கள் கட்டிடக் கலைஞர், ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் போன்ற துறைகளில் இருப்பார்கள்.
எடுத்துக்காட்டு: பில் நெய், அறிவியல் தொடர்பாளர்
மகரம் :
மகர ராசிக்காரர்கள் பணம் மற்றும் நேர மேலாண்மை குறித்து புத்திசாலிகளாக இருப்பார்கள். சரியான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான திறன் பெற்றவர்கள். இவர்கள் நன்றாக சம்பாதிப்பது மட்டுமின்றி அந்த பணத்தை சரியாக சேமித்து முன்னேறுவார்கள். இவர்களின் நிர்வாக திறமையால் நிதி சார்ந்த பணிகளில் சிறந்து விளங்குவார்கள். மகர ராசிக்காரர்கள் நிதி மேலாண்மை, வங்கி, கணக்கியல், சட்டம் மற்றும் நிர்வாகம் சார்ந்த துறைகளில் பணியாற்றுவார்கள்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் செய்யும் பணியில் ஆர்வமாக இருப்பார்கள். புதுமை விரும்பியான இவர்கள் கலை நயம் சார்ந்த ஓவியம், புகைப்பட கலைஞர் ஆகிய பணிகளில் பணியாற்ற விரும்புவார்கள். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அவர்கள் மிகவும் தீர்மானிக்கப்படாதவர்களாக இருப்பார்கள். அதாவது பாதுகாப்பு இல்லாத ஒரு நபரின் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். இவர்கள் ஏரோநாட்டிகல், வானியல் அறிவியல் மற்றும் சமூக சேவகர் பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.
எடுத்துக்காட்டு: வினோபா பாவ், சமூக சேவகர்
மீனம் :
மீனம் ராசிக்கார்கள் தலைமை அதிகாரி பணிகளில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் எப்போதும் தங்கள் நம்பிக்கையை இழப்பதில்லை. இதனால், மீனம் ராசி நபர்கள் சிறந்த கலைஞர்களாக இருக்கலாம், அல்லது கல்வியாளர்கள், ஆலோசகர்கள், உளவியல், மற்றும் ஜோதிட நிபுணர்களாக இருப்பார்கள்.
எடுத்துக்காட்டு: மைக்கேலேஞ்சலோ, கலைஞர்.



