சென்னை விமான நிலையத்தில் மூடுபனி : பயணிகள் தவிப்பு
#India
#Airport
#லங்கா4
#Chennai
#Passenger
#இந்தியா
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
1 year ago

சென்னை விமான நிலையத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மூடுபனியால் 88 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. 12 விமானங்கள் தரையிறங்க முடியாததால் பயணிகள் தவித்தனர்.
68 விமானங்களின் வருகை, புறப்பாடு பல மணி நேரம் தாமதமானது. 8 விமானங்களின் டெல்லி, மும்பை, இலங்கை வருகை, புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையான நேற்று திங்கட்கிழமை காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை சென்னை விமான நிலைய பகுதியில் திடீரென மூடுபனி ஏற்பட்டது. விமான நிலையம் தெரியாத அளவில் பனி சூழப்பட்டது.
இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த நேரத்தில் சென்னையில் தரையிறங்க வந்த விமானங்கள் அனைத்தையும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பும் பணிகளில் ஈடுபட்டனர்.



