ரஜனிகாந்தின் வேட்டையன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

#Cinema #TamilCinema #Lanka4 #திரைப்படம் #release #லங்கா4 #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #poster
ரஜனிகாந்தின் வேட்டையன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். 

அவரது 170-வது படமான இதற்கு ‘வேட்டையன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். 

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

images/content-image/1705401932.jpg

 சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (ஜன.15) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வழக்கமான போஸ்டர்களை போல இல்லாமல் ஓவியத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

 இதனை ஓவியர் ராஜ்குமார் ஸ்தபதி வரைந்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4