பிரான்ஸ் ஒலிம்பிக் உடைகள் இன்று வெளியிடப்படுகிறது
பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் இவ்வாண்டு நடைபெற இருக்கும் நிலையில், பிரெஞ்சு ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் அணியைச் சேர்ந்த 800 விளையாட்டு வீரர்களின் ஆடைகள் ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய்கிழமை இன்று மாலை வெளியிடப்படுகிறது.
ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளுக்குமான ஆடைகள் வெவ்வேறு வடிவங்களாக வடிவமைக்கப்பட உள்ளன. பிரான்சின் தேசிய நிறங்களான நீலம் வெள்ளை சிவப்பு நிறங்களுடன் ஒரு சேவல் பின்னணியும் உள்ளதாக அவை வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
'Paris 24' எனும் பெயரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 26 ஜூலை ஆரம்பமாகி 11 ஓகஸ்ட் முடியும் எனவும், பராலிம்பிக் போட்டிகள் 28 ஓகஸ்ட் ஆரம்பமாகி 08 செப்டம்பர் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்றிலிருந்து ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 192 நாட்களும், பராலிம்பிக் ஆரம்பமாக 225 நாட்களும் உள்ளன. பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பலத்த பாதுகாப்புகளோடு பல்வேறுபட்ட முன்னேற்ற ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.