கனடாவில் சர்வதேச மாணவர் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க ஏற்பாடு

#Canada #International #Home #வீடு #students #லங்கா4 #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
கனடாவில் சர்வதேச மாணவர் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க ஏற்பாடு

கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை பூதாகரமாகிவரும் நிலையில், அதைக் காரணம் காட்டி, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டுவருகிறது. கனடாவில் வீடுகள் பற்றாக்குறை ஆளும் அரசுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது.

 எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பிவரும் நிலையில், வீடுகள் பற்றாக்குறை மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக, வீட்டு வாடகைகள் 22 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளன. ஆகவே, நிலைமை கைமீறிப்போய்விட்டது என்று கூறியுள்ள புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

images/content-image/1705412066.jpg

 கனடாவுக்கு புலம்பெயரும் மக்கள் எண்ணிக்கை அதிகமானால், அதற்கேற்ப வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியதுதானே என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ஆனால், வீடுகளைக் கட்டுவதற்கு பதிலாக, மீண்டும் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்துள்ளது கனடா அரசு. விடயம் என்னவென்றால், கனடாவுக்கு சர்வதேச மாணவர்களால் பெரிய வருவாய் கிடைக்கிறது. 

கனேடிய மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தை விட, சர்வதேச மாணவர்கள் பல மடங்கு அதிக கல்விக்கட்டணம் செலுத்துகிறார்கள். ஆக, சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையைக் குறைப்பது கனடாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு என்று தெரிந்தும், ஏன் அமைச்சர்கள் மாணவர்களையே குறிவைக்கிறார்கள் என்று புரியவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!