அயலான் திரைப்படம் இதுவரை ரூ 50 கோடி வசூலை பெற்றுத் தந்துள்ளதாக அறியப்படுகிறது

#Cinema #TamilCinema #Lanka4 #திரைப்படம் #Revenue #லங்கா4 #தமிழ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
அயலான் திரைப்படம் இதுவரை ரூ 50 கோடி வசூலை பெற்றுத் தந்துள்ளதாக அறியப்படுகிறது

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

images/content-image/1705416391.jpg

ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் இதுவரை ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4