புதிய அரசியலைப்பு குறித்து அதிபர்கள் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Principal
Thamilini
2 years ago
புதிய அரசியலைப்பு குறித்து அதிபர்கள் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

புதிய சேவை அரசியலமைப்பு காரணமாக அதிபர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதிபர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.  

இந்த வாரம் கூடும் அமைச்சர்கள் சபையில் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிடின் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்தார்.  

பதவி உயர்வு மற்றும் சம்பளத்தை இழந்தவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீளுமாறு அதிகாரிகளுக்கு குறிப்பாக கல்வி அமைச்சருக்கு அறிவித்துள்ளனர். அமைச்சரவை பத்திரம் மூலம் இதற்கு தீர்வு காண்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். 

அண்மையில் நாம் நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் உறுதியளித்தார். அடுத்த வாரம் புதன் கிழமை அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும் என நம்புகிறோம். 

இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். இல்லை என்றால் அனைத்து அதிபர்களையும் கூட்டி தீவிர நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4