கடுவெல பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட குழந்தை மாயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Missing #lanka4Media
Thamilini
2 years ago
கடுவெல பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட குழந்தை மாயம்!

நீராடச் சென்ற குழந்தை ஒன்று முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக கடுவெல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

கடுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் உள்ள களனி ரிவர் பியர் பகுதியில் நீராடச் சென்ற குழந்தை காணாமல் போயுள்ளது.  

கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 11 வயதான வெலிவிட்ட என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளது. 

காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படை பிரிவு நீர்மூழ்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4