இணையம் மூலம் பணமோசடி செய்த பதுளையைச் சேர்ந்த நபர் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
இணையம் மூலம் பணமோசடி செய்த பதுளையைச் சேர்ந்த நபர் கைது!

இணையத்தில் பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

இணையத்தில் மோசடியான முறையில் பணம் முதலீடு செய்யப்படுவதாகத் தெரிவித்து, பணத்தை தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிட தூண்டி 1,680,000 ரூபாவை மோசடி செய்ததாக இந்த சந்தேகநபர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

குறித்த சந்தேகநபரிடம் விசாரணை நடத்தப்பட்டு நேற்று (16.01) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான சிறிமல்கொட என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4