மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

#India #SriLanka #Mannar #Arrest #Fisherman #Lanka4
Mayoorikka
2 years ago
மன்னார்  கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற் றொழிலாளர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

images/content-image/2023/01/1705471668.jpg

 கைதான 18 கடற் றொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டன.

images/content-image/2023/01/1705471689.jpg

 அதன்பின்னர் 18 கடற் றொழிலாளர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

images/content-image/2023/01/1705471713.jpg

 -குறித்த இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட குஞ்சு மீன்கள் மீட்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4