யுக்திய நடவடிக்கை - மேலும் 1,024 பேர் கைது

#SriLanka #Arrest #Police #island #drugs #search #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
யுக்திய நடவடிக்கை - மேலும் 1,024 பேர் கைது

நாடளாவிய ரீதியில் யுக்திய நடவடிக்கையின் கீழ் நேற்று (16) முதல் இன்று (17) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 13 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்பு காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் போதைக்கு அடிமையான 8 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 45 சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். 

இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் அளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

227 கிராம் ஹெராயின் 

168 கிராம் ஐஸ் 

கஞ்சா 8 கிலோ 40 கிராம்

13,892 கஞ்சா செடிகள்

227 கிராம் மாவா 

24 கிராம் மதன மோதகம் 

647 மாத்திரைகள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4