கும்பம் உங்கள் ராசியா ? தொழில், செல்வம் மற்றும் ஆரோக்கியம் எப்படியிருக்கும் ?
கும்பம் ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.
உடல் அமைப்பு
கைகள் நீண்டு அழகாகவும், மென்மையாகவும், இருக்கும் முட்டை வடிவிலான முகத் தோற்றம் கொண்டவர். இவரது கழுத்து முதுகு முகாம்களிலும் மச்சம் இருக்கும்.
செல்வ நிலை:
இவர்களது பணவரவு தங்களது வீட்டு செலவை கூட புத்திசாலித் தனமாகப் குறைத்து விடுவர். இவர்களுக்கு நண்பர்களை விட எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவர்களுக்கு அசையும் அசையா சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உள்ளது. எப்போதும் பண நடமாட்டம் இருக்கும்.
கும்பராசிக்காரர்கள் 25 வயதிலிருந்தே யோகம் ஆரம்பிக்கிறது. சிறப்பான யோகம் ஏதும் கும்ப ராசிக்காரர்கள் இருக்காது. இந்த வயதில் இருக்காது செலவை குறைக்க வாய்ப்பும் இல்லை. ஆனால் சொத்து சேரும் யோகம் உண்டு.
தொழில்
கும்ப ராசி நேயர்களின் அதிர்ஷ்டம் பொறியாளர் விஞ்ஞானம், கல்வித்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவது நல்லது. எந்த வேலை செய்தாலும் அதில் புதிய நுணுக்கங்களை கண்டறிவதன் மூலம் இவர்களுக்கு புகழ் உண்டாகும்.
பேராசையும் சோம்பேறித்தனமும் கும்ப ராசிக்காரர்களின் முக்கிய பிரச்சினையாகும். நடந்து முடிந்த விஷயங்களை எண்ணி எண்ணி இவர்கள் வருந்திக் கொண்டே இருப்பார்கள். யாராவது எதையாவது சொல்லி விட்டாலும் கூட மனம் உடைந்து போவார்கள். பயணம் செய்வது பிடிக்கும்.
ஆனால் எந்த பயணமும் நன்மையில் முடியாது. இதனால் பண நஷ்டமும் நேர விரையம் வீண் ஆகும். கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பார்வை உண்டு. இதனால் அவர்களுக்கு சனிக்கிழமைகளில் அதிர்ஷ்ட தினமாகும். சனிக்கிழமைகளில் செய்யும் செயல்கள் வெற்றிகரமாக அமையும்.
இவர்களுக்கு வெள்ளிக்கிழமை சுபம். ஞாயிற்றுக்கிழமை பரவாயில்லை. வியாழக்கிழமை செய்ய தேவையில்லை. கருப்பு நீலம் பச்சை நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் ஆக இருக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் எந்த காரியத்தையும் துவக்க வேண்டாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு 4 மற்றும் 8 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும். 4ன் கூட்டு எண்களும் 8ன் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமாகும். 1, 2, 9 ஆகிய எண்கள் அசுபம் ஆகும்.