சரித்திர நாயகன் எம். ஜி. இராமச்சந்திரனின் பிறந்த நாள் நினைவையொட்டி தானம் வழங்க எடப்பாடி கோரிக்கை

#India #Tamil Nadu #லங்கா4 #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
சரித்திர நாயகன் எம். ஜி. இராமச்சந்திரனின் பிறந்த நாள் நினைவையொட்டி தானம் வழங்க எடப்பாடி கோரிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சரித்திரத்தின் ஏடுகளில் சாகா வரம் பெற்ற எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளை காலம் பெருமிதத்தோடு நினைவு கூர்கின்ற பொன்னான நேரமிது. 

ஒரு மனிதர் மறைந்த பிறகும் நீண்ட காலம் நினைக்கப்படுகிறார் என்றால் அவர் நல்ல மனிதர், மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் மக்கள் மனங்களில் ஒரு மனிதர் சிம்மாசனமிட்டு அமர்ந்து, உள்ளங்களை ஆட்சி செய்கிறார் என்றால், அவர் மாமனிதர், அவரே மனிதருள் மாணிக்கம். 

images/content-image/1705483159.jpg

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழை மக்கள் மன்றத்தில் சேர்க்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதோடு, பெருந்துயரால் பாதிக்கப்பட்டு நிற்கின்ற லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதுகாக்கின்ற வகையில் அவர்களோடு தோளோடு தோள் நின்று, முடிந்தவரை நலத் திட்ட உதவிகளை நல்கிட பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!