ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு மற்றுமொரு புதிய விமானம்!

#SriLanka #Flight #Airport #Lanka4 #Air Force
Mayoorikka
2 years ago
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு மற்றுமொரு புதிய விமானம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானப் பிரிவினருக்காக மற்றுமொரு புத்தம் புதிய A-330 -243 எயார்பஸ் ரக விமானத்தை குத்தகை அடிப்படையில் பெற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

 பிரான்சில் தயாரிக்கப்பட்ட குறித்த புதிய விமானம் செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

images/content-image/2023/01/1705485676.jpg

 இந்த விமானத்தில் 22 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 240 எகானமி வகுப்பு இருக்கைகள் உள்ளதாகவும், இரண்டு என்ஜின்கள் மூலம் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த புதிய விமானத்தின் வருகையானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்நோக்கும் விமான தாமதங்கள் மற்றும் இரத்துச் சம்பவங்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4