புதிய நியமனங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்!

#SriLanka #Parliament #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
புதிய நியமனங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்!

உயர்ஸ்தானிகர் உட்பட 5 புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் தொடர்பான குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள பி. ஆர். எஸ். குணவர்தனவின் நியமனத்தை அந்த குழு அங்கீகரித்துள்ளது.

அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரவை அல்லாத அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம்.எஸ்.பி. யாலேகமவின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1705485869.jpg

அத்துடன், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக எஸ்.சி.ஜே.தேவேந்திரவின் நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம். பெர்னாண்டோவின் நியமனத்தையும், அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.எம். சூசைதாசனின் நியமனத்தையும் உயர் பதவிகளுக்கான குழு அங்கீகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4