தமிழரசுக் கட்சியின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் மிகப் பெரும் பொறுப்பு உள்ளது!
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ போட்டிக்காக வேட்பாளர் தெரிவுகள் அண்மைக்காலமாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ள நிலையில் உள்ளது.
இந்தநிலையில் தற்போது தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகின்ற நிலையில் ஒருசாரார் சுமந்திரன் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் நல்லது என்றும் மற்ரொரு சாரார் சிறிதரன் வாந்தால் நல்லது என்றும் பேசப்பட்டு வருகின்றது.
சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கு இடையில் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்றதாக தெரிகின்றது. அதேநேரத்தில் அணுகுமுறை அரசியல் முரண்பாடுகளும் உள்ளது.
சுமந்திரனை பொறுத்தவரையில் தமிழ் மக்களினுடைய பிரச்சனையை ஒரு அடையாள பிரச்சனையாக பார்க்கின்றார் அந்தநிலையில் அவர் அடையாள அரசியலை முன்னெடுக்கும் நிலைதான் காணப்படுகின்றது. ஆனால் சிறிதரனை பொறுத்தவரை இறைமை அரசியலை முன்னடுக்கும் நிலைதான் காணப்படுகின்றது.
சுமந்திரன் அடையாள அரசியலை பேணுகின்ற நிலையில் உள்ளதால் தென்னிலங்கை அரசியலோடு இணக்க அரசியல் செய்யும் நிலையில் தான் இருக்கின்றார். சிறிதரனை பொறுத்தவரை அன்றிலிருந்து இன்றுவரை எதிர்ப்பு அரசியலை பேணுகின்ற நிலையில்தான் உள்ளார்.
இதனைவிடவும் சுமந்திரன் மேற்குலகம் சார்பான ஒருவராகவும் கருதப்படுகின்றார். ஆகவே நன்றாக அடையாளம் காணக்கூடிய நிலையில் தான் இருவரும் இருக்கின்றார்கள் கொள்கை முரண்பாடுகளும் அணுகுமுறை முரண்பாடுகளும் இவர்கள் இருவருக்குமிடையில் இருக்கின்ற நிலைதான் காணப்படுகின்றது.
இந்த நிலையில் சுமந்திரன் வெற்றியடைவாராயின் கொள்கை ரீதியாக நிற்கும் போது கட்சி உடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு வருவதை விரும்பவில்லை.
அவர் தென்னிலங்கை சார்பானவராக இருக்கின்றார் எண்பதும் மேற்குலக சார்பானவர் என்கின்ற நிலையும் இதைவிட இந்தியாவினுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் வரமுடியாத ஒருவர் என்கின்ற நிலையின் காரணமாக இந்தியா சுமந்திரன் கட்சியின் தலைவராகுவதை விரும்பாத நிலைதான் உள்ளது. எனவே கட்சி உடைவதை இந்தியாவும் ஆதரிக்க கூடிய நிலைமையும் உருவாகலாம்.
தமிழரசுக் கட்சி என்பது ஒரு யாப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டது அதற்கு பல கிளைகள் உண்டு அதற்கு பல அங்கத்தவர்களும் உள்ளனர். அந்தவகையில் ஜனநாயக ரீதியில் குறித்த அங்கத்தவர்கள் தங்களுடைய தலைவரை தெரிவு செய்வதற்கு உரிமை உண்டு.
இந்தநிலையில் தமிழரசுக் கடைசிக்கான தலைமைத்துவத்தினை தேர்ந்தெடுக்கப்போகும் அந்த அங்கத்தவர்கள் தாங்ககள் தெரிவு செய்து வழங்கப் போகின்ற தலைமைத்துவம் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவமா அல்லது வெறுமனே தேர்தல் அடிப்படையிலான தலைமைத்துவமா என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் இது.
ஆகவே அவர்களிடம் மிகப் பெரும் சமூக கடப்பாடு ஒன்று உள்ளது.அவர்கள் வெறுமனே கட்சி அடிப்படையில் ஓரங்கட்டிக் கொண்டு சிதைந்து போவதும் அல்லது தனிப்பட்ட அபிலாசைகள் விருப்புக்கள் அடிப்படையில் மட்டும் தங்களுக்கு பிரியமானவர்களை தெரிந்தெடுப்பதும் அவர்களது உரிமையாக இருந்தாலும் கூட அது இந்தக் கால கட்டத்தில் தமிழ் சமூகத்திற்கு ஏற்புடையாதாக இருக்குமா என்பதை யோசிக்க வேண்டும்.
எதிர்காலத்திற்கான தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தினை உருவாக்கும் பணியில் ஈடுபடும் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் மிகப் பெரும் பொறுப்பு உள்ளது. தமிழ் மக்களின் எதிர்காலத்தினை சிந்தித்து அவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.