செங்கடலில் ஹூதிஸ் பயங்கரவாத அமைப்பினர் மீது பிரான்ஸ் தாக்குதல் நடத்தாது - மக்ரோன்

#France #Attack #தாக்குதல் #லங்கா4 #ஜனாதிபதி #பிரான்ஸ் #Terrorists #Houthi #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
செங்கடலில் ஹூதிஸ் பயங்கரவாத அமைப்பினர் மீது பிரான்ஸ் தாக்குதல் நடத்தாது - மக்ரோன்

செங்கடலில் ஹூதிஸ் (Houthis) பயங்கரவார அமைப்பினர் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதலில் பிரான்ஸ் இணைந்துகொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

 ஹூதிஸ் அமைப்பினர் யேமனி தலைநகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்தவாரத்தில் தீடீரென ஹூதிஸ் அமைப்பினரின் பல்வேறு கட்டுப்பாட்டு தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பிரித்தானியப் படையும் இணைந்துகொண்டது. 

images/content-image/1705498988.jpg

 கடல் வழி வர்த்தகத்தை பாதுகாக்கவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த தாக்குதலில் பிரான்ஸ் இணைந்துகொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார். 

‘எந்த தாக்குதல் அதிகரிப்பையும் தவிர்க்கும் சிந்தனையே எங்களிட உள்ளது!’ என ஜனாதிபதி தெரிவித்தார். அண்மையில், செங்கடலில் நிலைகொண்டுள்ள பிரெஞ்சு கப்பலை ஹூதிஸ் அமைப்பினருக்கு சொந்தமான ட்ரோன் விமானங்கள் கண்காணித்த நிலையில், அவற்றை பிரெஞ்சு இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!