தேங்காய் அறுவடையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி : விலை உயரும் அபாயம்!

#SriLanka #Coconut #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
தேங்காய் அறுவடையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி : விலை உயரும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினங்களில் தேங்காய் அறுவடையில் பற்றாக்குறை நிலவுவதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது. 

தென்னை அபிவிருத்திச் சபையின் கூற்றுப்படி, ஆண்டு முழுவதும் சுமார் 1500மிமீ மழைவீழ்ச்சியும், தென்னை அறுவடைக்கு சுமார் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தேவை.  

ஆனால் கடந்த சில மாதங்களாக சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் காணப்பட்டது. வரும் மே மாதத்திற்குள் படிப்படியாக இந்த நிலை திரும்பும் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, காலி மாவட்டத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா தொடக்கம் 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4