அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ரணிலுக்குமிடையில் விசேட சந்திப்பு!
#SriLanka
#Switzerland
#America
#Ranil wickremesinghe
#Lanka4
#President
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோரையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கை வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



