கோவையில் நடைபெற்ற இந்து,முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்ட குருநானக் ஜெயந்தி விழா
சீக்கியர்களின் நிகழ்வில் இந்து,முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்ப்பு. சீக்கிய மதத்தின் முக்கிய விழாவாக கொண்டாப்படும் குரு நானக் ஜெயந்தி விழா கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள குருநானக் சிங் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
சீக்கிய மதத்தினரின் முக்கிய விழாவாக கருதப்படும் இதில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து,முஸ்லீம் என பல்வேறு மதத்தினரும் கலந்து கொண்டனர்.குருநானக் சிங் சங்கத்தின் தலைவர் குர்பிரீத் சிங்,உறுப்பினர் டோனி சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற,இதில்,தொழிலாளர் நீதிமன்ற நடுவர் அருணாச்சலம், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,சி.ஆர்.பி.எஃப். ஐ.ஜி.அஜய் பர்தன்,கமாண்டன்ட் ராஜேஷ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, ,பல சமயத்தினரும் கோவிலிலோ,கிறிஸ்தவ ஆலயத்திலோ,பள்ளிவாசல்களிலோ தனித்தனியாக சென்று வழிபட்டாலும்,வெளியில் அனைவரும் இந்தியர்களே என தெரிவித்தார்.எனவே மதங்களை தாண்டி அனைத்து மத நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கூறினார்..நிகழ்ச்சியில் பேரூர் உமாபதி தம்புரான்,அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத்,முகம்மது இஸ்மாயி்ல்,ஜீவசாந்தி சலீம்,ஜெரீனா பேகம்,கவிஞர் அன்வர் பாட்சா,சீனிவாசன், முகம்மது அலி,அபுதாகீர்,சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.