கடுமையான பனிப்பொழிவு நிகழும் வன்கூவரில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலையினால் வான்கூவாரில் விமான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக இவ்வாறு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோசமான வானிலையினால் விமானப் பயணங்களை ரத்து செய்யவும், காலம் தாழ்த்தவும் நேரிட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் பயணிகள் விமானப் பயணம் குறித்த நேர அட்டவணை மற்றும் விமான கால தாமதங்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் விமான நிலையம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் ஓடு பாதையில் கடுமையாக பனி படர்ந்துள்ளதாகத் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கன்றனர்.
படர்ந்துள்ள பனியை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விமானங்களை தரையிறக்குவதற்கும், விமானங்களை பறக்கச் செய்வதற்கும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.



