பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

#PrimeMinister #UnitedKingdom #Festival #Tamil People #Tamil #Pongal #celebration #2024 #House #lanka4Media #lanka4.com
Prasu
11 months ago
பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

இன்று, சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்புக்கான அமைச்சர் மேன்மைக்குரிய விக்டோரியா அட்கின்ஸ் அவர்கள் பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் ஒரு கோலாகலமான பொங்கல் கொண்டாட்டத்தை நடத்தினார்.

பிரதமரின் அதிகாரபூர்வ இல்ல நுழைவாயில் ஒரு பாரம்பரிய கோலத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, மேலும் தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகைபூ அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பாணை மற்றும் கரும்பு என்பனவும் இடம்பெற்றிருந்தது.

images/content-image/1705604301.jpg

இந்த நிகழ்வில் கல்வியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உட்பட பிரித்தானிய தமிழ் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள், குறிப்பாக இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஸ்தானிகர் விக்ரம் துரைசுவாமி கலந்து கொண்டனர்.

தமிழ் சமூகத்தை வரவேற்று உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ், உலகப் போரின் முன்னோடி விமானிகள் முதல் கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் வரை ஐக்கிய இராச்சியத்திற்கு தமிழர்களின் நீண்டகால பங்களிப்புகளை பாராட்டினார்.

images/content-image/1705609532.jpg

மேலும் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் தமிழர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட தமிழ் கல்வியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இலங்கையில் தமிழரின் நிலையை பற்றி உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான இங்கிலாந்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார், 

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவை வலியுறுத்தனார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் ஒரு திட்டத்திற்காக 11 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார், 

images/content-image/1705609559.jpg

இது நீதிக்கான ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார். அமைச்சரது உரையை தொடர்ந்து திருமதி உஷா ராகவனின் மாணவிகளின் பாரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது, 

கொண்டாட்டத்திற்கு ஒரு கலாச்சார மெருகை ஏற்றியது. தோசை, இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் உணவு பதார்த்தங்கள் மேலைத்தேச கானப்பே வடிவில் பரிமாறப்பட்டதை விருந்தினர்கள் ருசித்து மகிழ்ந்தனர்.

images/content-image/1705609572.jpg

images/content-image/1705609583.jpg

images/content-image/1705609595.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!