புத்தளத்தில் நாயை காப்பாற்றும் முயற்சியில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Puththalam
Thamilini
2 years ago
புத்தளத்தில்  நாயை காப்பாற்றும் முயற்சியில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளத்தில் நாய் ஒன்றை காப்பாற்றும் முயற்சியில் நபர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மாதம்பே, விலத்தவ பகுதியில் இருந்து நான்கு வழிச் சந்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

வேனுக்கு குறுக்காக பாய்ந்த நாயை காப்பாற்றும் முயற்சில் ஈடுபட்ட வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.  

குறித்த விபத்தல்,   மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில் கல்முருவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தும்மலசூரிய பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் கல்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4