இந்தியாவில் படகு விபத்து : பள்ளி மாணவர்கள் உள்பட 14 பேர் பலி!
#India
#SriLanka
#Accident
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#School Student
#Boat
Dhushanthini K
1 year ago

மேற்கு இந்தியாவில் படகு விபத்தில் 12 பள்ளி மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஜராத் மாநிலம் வடடோராவில் உள்ள ஹார்னி ஏரிக்கு ஆய்வுப் பயணமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 12 குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதுடன், விபத்தின் போது படகில் சுமார் 31 பேர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் 07 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகில் பயணித்தவர்கள் உயிர்காக்கும் அங்கி அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



