தனுசு உங்கள் ராசியா ? தொழில், செல்வம் மற்றும் ஆரோக்கியம் எப்படியிருக்கும் ?

#Astrology #Healthy #Lanka4 #ஆரோக்கியம் #தொழில் #work #பணம் #ஜோதிடம் #ராசிபலன் #லங்கா4 #money #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
தனுசு உங்கள் ராசியா ? தொழில், செல்வம் மற்றும் ஆரோக்கியம் எப்படியிருக்கும் ?

தனுசு ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.

 தொழில்

  •  சுய தொழில் செய்வது உத்தமம். கூட்டாளியாகவும் செய்யப்படலாம் அல்லது ஆசைப்படி தொழில் செய்யலாம். எதிலும் அதிக லாபம் கிட்டும். எப்போதும் வேலை வேலை என்று இருப்பார்
  • துணி, விளையாட்டு சாமான்கள் தயாரிப்பு தொழிலில் லாபம் அடைவர். ஏதாவது ஒரு தொழிலை தேர்வு செய்து அதில் நிலையாக இருப்பது நல்லது. 

  • தனுசு ராசி நேயர்களின் கொடுக்கல்-வாங்கல் எல்லாம் சுகமாக இருக்கும். இவர்கள் அதிகம் செலவாவதால், சேமிக்க இயலாது.

  •  இவர்களது வாழ்நாளில் ஒரு பெரும் செலவு செய்யும் வாய்ப்பு உண்டு. ஏமாற்றப்படவும் வாய்ப்பு உண்டு. பணம் இருந்தால்தான் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

  • தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்காகவே செலவு செய்பவர். பணம் செலவாவது கண்டு கண்ணீர் விடுபவர்களும் இவர்கள்தான். வழக்கறிஞர், தட்டச்சு, நடிப்பு, பொதுமக்களுடனான தொடர்பு, மருத்துவம் போன்றவற்றில் புகழ் அடைவர்.

  •  எழுத்தாளர் ஆனால் அதிகம் சம்பாதிக்கலாம். நடிகனாகும் வாய்ப்பு உண்டு. அரசியலில் புகழ் பெறுவர். இராணுவத்தின் பணியாற்றுவதில், சுய தொழிலில் அதிக லாபம் அடைவர். தெற்கு வடக்கு திசைகளில் வாசற்படி அமைந்த வீடுகளில் வாழ்வது நலம்.

    images/content-image/1705651022.jpg

 தனுசு ராசியினரின் உடல் அமைப்பு:

  •  வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் மச்சம் அல்லது தழும்பு இருக்கும். இவர்களது கைவிரல்கள் சிறியதாக இருக்கும் அமைப்பு. இவர்களுக்கு 14 முதல் 21 வயது வரையிலும் 35 முதல் 45 வயது வரையிலும் 56 முதல் 63 வயதிலும் தனது உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். 

  • 70 முதல் 63 வயதில் வரும் புகழ் அடைவர். பின்னர் இவர்களது வாழ்க்கை கஷ்ட ஜீவனம் இல்லாமல் இருக்கும்.

  • தனுசு ராசி நேயர்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு, வெளிர் நீலம். வெள்ளை, பச்சை நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாகும். கருப்பு நிறத்தை எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது.
     
  • இவர்களது காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார்.

 காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். உங்கள் ராசிகளுக்கான ராசிக்கல் மற்றும் அதன் பயன்கள்

 அதிஷ்ட தினம் 

இவர்களின் அதிஷ்ட தினம் புதன்கிழமை. ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய், வியாழன், சனிக்கிழமை இவர்களுக்கு அசுபம் ஆகும்.

 அதிர்ஷ்ட எண்

 3, அதன் கூட்டு எண்களான 12ம் 21ம் போன்றவையும் சுபம். 5,6, எண்கள் அசுபம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!