புலம்பெயர் தமிழ் பண முதலீட்டாளார்களிடம் சிக்குமா தமிழரசுக் கட்சி!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவ பதவிக்காக கட்சியின் மூத்த மற்றும் மக்கள் மனங்களில் இடம்பிடித்த சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்த பதவிக்காக போட்டி போட்டு வருகின்றனர்.
இதில் சிறீதரன் அவர்களிற்கும் சுமந்திரன் அவர்களிற்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்கு வங்கியே காணப்படுகின்றது. இந்த போட்டியினை சிலபேர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு சில தமிழ் ஆர்வலர்களும் , சில முதலீட்டாளர்களும் இந்த தேர்தலினையும் இதில் போட்டி போடும் இருவரையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இவர்கள் இவ்வாறு ஏன் விமர்சனம் செய்கிறார்கள் என்ற காரணத்தினை கண்டறிய முனையும் போது சில உண்மை தகவல்களும் கிடைக்கின்றன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதான உறுப்பினர் பதவியை தமக்கு சார்பானவர்களினை கைப்பற்ற வைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியலை தாமே முடிவு செய்யும் நிலையில் இருக்க வேண்டும் என்ற சில அப்பட்டத்தனமான அபிலாசைகளின் வெளிப்பாடுகளினாலேயே அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்த இருவரையும் பேய் பிசாசு என விமர்சனம் செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல் தம்மை முன்னிறுத்தி சில தொலைக்காட்சிகளில் தமது கருத்துக்கள் சரியானவை என நிறுவ நினைப்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். தமிழ் மக்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் என்றால் அரசியல் நடவடிக்கைகள் இல்லாமலும் சில நல்ல காரியங்களினை செய்யலாம் .
ஆனால் புலம்பெயர் நாடுகளில் வாழும் சில நல்ல மனிதர்களிடம் உதவி செய்வதாக பணங்களினை வாங்கி உதவி செய்து விட்டு தமது பணத்தினை செலவு செய்வது போல் காட்டி வருவதும் இவர்களினைப்போன்று புலம்பெயர் நாடுகளில் இருந்து செயல்படும் சிலரே ஆகும், இவர்களினை தட்டி கேட்பதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை காரணம் அவர்களிடத்தில் காணப்படும் பண பலம் மற்றும் அரசியல் பலம் மக்களினை மறைமுகமாக அச்சுறுத்துகின்றது.
இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியல் சில பண முதலைகளிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவது போல் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அரசியலினையும் அதே போல் ஒரு சிந்தனை அற்ற அரசியலாக மாற்றுவதற்கே இந்த புலம்பெயர் தேசத்தில் உள்ள முதலீட்டாளர்களின் உள் நோக்கமாகும்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கையில் முதலீடு செய்வதற்காகவும் தமது வருமானங்களினை அதிகரிப்பதற்காகவும் சிங்கள அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து செயற்படும் போது தமிழ் மக்கள் மீதான அக்கறை கண்ணில் தோன்றுவதில்லை மாறாக அவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல் வளையை நெரிப்பது போல் அறிக்கை விடும் போது மட்டும் அவர்களின் அறிக்கைகள் பலமாக இருக்கின்றன, தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்றால் எத்தனையோ தமிழ் மக்கள் எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் அவர்களின் வாழ்வில் வெளிச்சங்களினை கொண்டுவர முயற்சி செய்யலாம்