இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#India #PrimeMinister #Tamil Nadu #M. K. Stalin #லங்கா4 #வெற்றி #win #இந்தியா #லங்கா4 ஊடகம்
இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க இருக்கிறது.

 தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. தங்கள் கட்சியை பலப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்து வருகின்றன.

images/content-image/1705659499.jpg

 தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 40 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான பணிகளை திமுக தொடங்கி செய்து வருகிறது. 

அந்த வகையில் திமுக சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, நாடாளுமன்ற தேர்தலை ஒருங்கிணைக்க குழு, தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட குழுவை திமுக தலைமை இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!