ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சுவிட்சர்லாந்து பயணத்தின் நோக்கம் என்ன? (பிரத்தியேக செய்தி)
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்ததாக அறியமுடிகிறது.
கடந்தவாரம் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பின் சுவிஸ்சர்லாந்து சென்று புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்ததன் நோக்கம் என்ன? எதற்காக அவர்களை சந்தித்தார்? இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறதா அல்லது தமிழ் மக்களுக்கு சாதகமாக செயற்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
சுவிட்சர்லாந்தின் இருந்து முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பும் விடுத்திருந்தார். அதாவது இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம் என்றும், எதிர்வரும் தசாப்தங்களில் இது பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தும் ஆகவே இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதேவேளை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்ற நிலையில் இவருடைய வெளிநாட்டு பயணம் தொடர்பில் பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவரின் திடீர் விஜயம் வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு திருப்பும் நோக்கமாக கூட இருக்கலாம்.
சுவிட்சர்லாந்து விஜயந்திற்கு அடுத்து ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.