பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கானது மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

#France #Sexual Abuse #Minister #லங்கா4 #பிரான்ஸ் #HighCourt #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கானது மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

உள்துறை அமைச்சர் Gérald Darmanin மீது தெரிவிக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டினை பரிஸ் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 தற்போதைய உள்துறை அமைச்சராக உள்ள Gérald Darmanin மீது, கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு ஒன்று தெரிவிக்கபப்ட்டது. Sophie Spatz-Patterson எனும் பெண் இந்த குற்றச்சாட்டினை தெரிவித்திருந்தார்.

images/content-image/1705670133.jpg 

2009 ஆம் ஆண்டு குறித்த பெண்ணை Gérald Darmanin பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை கடந்த சென்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் தள்ளுபடி செய்தது.

 இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் துளிர்விட்டுள்ளது. குறித்த Sophie Spatz-Patterson எனும் பெண் மீண்டும் தற்போது தள்ளுபடியை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். Sophie Spatz-Patterson மற்றும் Gérald Darmanin இருவரும் 2009 ஆம் ஆண்டில் உறவில் இருந்துள்ளனர். ஆனால் அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!