பிரித்தானியாவில் உணவின்றி உயிரிழந்த 2 வயது குழந்தை

#Death #Food #baby #England #Heart Attack #Father #lanka4Media #lanka4.com
Prasu
11 months ago
பிரித்தானியாவில் உணவின்றி உயிரிழந்த 2 வயது குழந்தை

பிரித்தானியாவில் உணவின்றி தந்தையை கட்டியணைத்தபடி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை ஒன்று தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

2 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்துவந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உணவளிக்க ஆளின்றி குழந்தையும் பட்டினி கிடந்து இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

60 வயதான கென்னத் தனது 2 வயது மகன் பிரான்சனுடன் லிங்கன்ஷைர் நகரில் தனியாக வசித்துவந்தார்.

குழந்தையை கவனிக்க சென்ற சமூக சேவகர் ஒருவர், வீட்டை யாரும் திறக்காததால் உரிமையாளரிடம் சாவியை வாங்கிக்கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றபோது, இறந்துபோன தந்தையை கட்டியனைத்தபடி மகனும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 2 வாரங்களுக்கு முன்பே கென்னத் மாரடைப்பால் இறந்ததும், உணவளிக்க ஆளின்றி பசியால் குழந்தையும் இறந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!