பிரான்ஸில் பிறந்த கைக் குழந்தையொன்று மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்டுள்ளது

#France #Hospital #குழந்தைகள் #லங்கா4 #Baby_Born #பிரான்ஸ் #மருத்துவமனை #Kidnap #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
பிரான்ஸில் பிறந்த கைக் குழந்தையொன்று மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்டுள்ளது

பிறந்து ஒரு மாதம் ஆன கைக்குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக Seine-et-Marne மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 குழந்தையை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று ஜனவரி 18 ஆம் திகதி வியாழக்கிழமை குழந்தை கடத்தப்பட்டதாக அறிய முடிகிறது. ஆபிரிக்காவை பூர்வீகமாக கொண்ட குறித்த கறுப்பின குழந்தை 50 செ.மீ நீளமும், 3 கிலோ எடையும் கொண்டதாகவும், கறுப்பு சுருள் முடியும் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/1705740795.jpg

 குழந்தையை அவரது தாயார் கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தை Meaux நகர மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை 7.35 மணியில் இருந்து 8.30 மணிக்குள்ளாக கடந்தப்பட்டதாகவும், குழந்தையின் தாயார் தொடர்பில் தகவல்கள் இல்லை எனவும், அவரி 21 வயதுடைய 1.73 செ.மீ உயரமுடைய கறுப்பினர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை மற்றும் அவரது தாய் இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!