முத்துராஜவெல சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க கர்தினால் கோரிக்கை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Cardinal
Thamilini
2 hours ago
முத்துராஜவெல சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க கர்தினால் கோரிக்கை!

முத்துராஜவெல சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க முத்துராஜவெல மேம்பாட்டு ஆணையம் என்ற நிறுவனத்தை நிறுவுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

பேராயர் இல்லத்தில் இன்று (05.02) நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “கம்பஹா மாவட்டத்தின் இயற்கை வடிகால் அமைப்பு முத்துராஜவெல சதுப்பு நிலங்கள் வழியாகவே உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 

இந்தப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் தொடர்ந்தால், எதிர்காலத்தில் கம்பஹா மாவட்டத்தில் மீண்டும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

முத்துராஜவெல சதுப்பு நில வலயத்திற்குள் அதிகரித்து வரும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் இன்று காலை பேராயர் இல்லத்தில் நடைபெற்றது.

 பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையில், கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!