நவீன அழகு சாதனப்பொருட்களா அல்லது இயற்கை அழகூட்டும் மூளிகைகளா ஆண்களை கவருகிறது ?
தற்போது பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் உச்சி முதல் உள்ளங்கால் வரை தமக்கு பிடித்தமான அழகூட்டும் நவீன அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். பிறரது கவனத்தை முக்கியமாக இளம் பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதுண்டு.
இது தவறானது என்று சொல்ல முடியாது காரணம் குறித்த பருவத்தில் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு இதுவாகும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கிணங்க ஒருவர் தனது மனதினை ஆரோக்கியமாகவும் துாய்மையாகவும் வைத்திருந்தால் அது இயற்கையழகு என்ற விதத்தில் முகத்தில் தெரியும்.
சில பெண்கள் கஸ்துாரி மஞ்சள் போன்ற இயற்கை மூளிகை மருத்துவத்தின் மூலம் தம் அழகை வெளிக்காட்டுவார்கள். இந்த கஸ்துாரி மஞ்சள், சருமத்தை மிருதுவாக்கி மினுமினுக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் சரும நோய்களையும் இது தேய்த்துக் குளிக்கும் போது போக்கும்.
இவை போன்ற இயற்கை அழகூட்டும் பொருட்களை பாவிக்காது, ஆடம்பர நவீன அழகு சாதனப்பொருட்களை வாங்கி வீணாக பொருளாதார சிக்கல் உள்ள இவ்வேளைகளில் குவிப்பதும் அடர்த்தியான ஒப்பனைகளை செய்து கொள்வதும் தீமையையே தரப்போகின்றது.
இந்த பொருட்களில் உள்ள இரசாயனம் சிலருக்கு கொடிய நோய்களையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்த வல்லது. குறிப்பாக பெண்களுக்கு நாட்டு வைத்திய முறையிலான இயற்கை மூளிகைகள் தரும் அழகே நிரந்தரமானதும், ஆரோக்கியமானதுமாகும்.
எனவே இந்த ஒப்பனைகளுடன் எப்போது உளத்தினையும் உடலையும் சுத்தமாக பேணிக் கொள்வதே பெண்களுக்கும் அனைவருக்கும் மெய்யான அழகை அக ரீதியாகவும் புற ரீதியாகவும் தரவல்லது என்பேன்.