போத்தலில் அடைத்து விற்க்கும் ஊறுகாயால் ஏற்படும் அபாய நோய்கள். அவதானம்.

#Health #Food #Disease #ஆரோக்கியம் #உடல் #நோய் #லங்கா4 #Bottles #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
5 months ago
போத்தலில் அடைத்து விற்க்கும் ஊறுகாயால் ஏற்படும் அபாய நோய்கள். அவதானம்.

தற்போது விதம் விதமாக உணவில் வகைகளை சேர்ப்பது என்பது மரக்கறிகளின் விலையேற்றத்தில் இயலாத காரியமாகும். சிலர் அதனால் ஊறுகாயை உண்ணும் உணவுடன் சேர்த்து சுவைபட உண்கிறார்கள்.

அன்றாடம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள். பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும்.

 அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். செரிமான பிரச்சனைகள் ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சாகலாம் என்ற முதுமொழிக்கேற்ப நாம் ஊறுகாயை பயன்படுத்த வேண்டும். தவறினால் அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

images/content-image/1705750240.jpg

 அல்சர்

 ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

 இரத்த அழுத்தம்

 இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.

 இதய நோய்

 ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

 வயிறு உப்புசம்

 ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிகம் இருப்பதால் அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.